பீஜிங்

ரசால் கைது செய்யப்பட்ட பஞ்சன் லாமா தற்போது எங்கு இருக்கிறார் எனச் சீன அரசை அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளது

புத்தமத தலைவரான தலாய் லாமா சீன அரசின் கொடுமையால் திபெத்தில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் வெகு நாட்களாகத் தங்கி வருகிறார்   புத்த மத வழக்கப்படி தலாய் லாமா பதவி வகிப்பவர்கள் தனக்கு அடுத்தபடியாக பதவிக்கு வர சிறுவனாக உள்ள ஒருவ்ரை தேர்வு செய்து அவருக்கு பஞ்சன் லாமா என பட்டம் சூட்டுவது வழக்கமாகும்.

அவ்வகையில் தற்போதைய தலாய் லாமா கடந்த 1995 ஆம் வருட மே மாதம் 14 ஆம் தேதி ஆறு வயதான கேதுன் சொயக்யி நியிமா என்பவரை பஞ்சன் லாமாவாக பட்டம் சூட்டினார்.    அவர் பட்டம் சூட்டப்பட்ட மூன்று தினங்களுக்கு பிறகு அவரை கைது செய்து சீன அரசு அழைத்துச் சென்று காவலில் வைத்தது.  அவர் எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.  பஞ்சன் லாமா உலகின் மிகக் குறைந்த வயதுள்ள அரசியல் கைதி என மனித உரிமைக் குழுக்கள் கூறின.

இது குறித்து அமெரிக்கத் தூதர் சாம் பிரவுன்பேக், “சீன அரசை நாக்கள் பஞ்சன் லாமாவை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  சீன அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.  அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதற்கும் சீன அரசு பதில் அளித்து அவர் இவ்வளவு நாள் எங்கு இருந்தார் என்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும்.” எனக் கூறி உள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சீன அரசு சார்பில் தலாய் லாமாவால் நியமிக்கப்பட்ட  பஞ்சன் லாமா கல்வி பயின்று வருவதாகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தம்மை யாரும் தொல்லைப்படுத்த  விரும்பவில்லை எனவும் தெரிவித்ததாக கூறியது.  மேலும் சீன அரசு சார்பில் ஒரு பஞ்சன் லாமா நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரை திபெத் புத்தர்கள் தங்கள் தலைவராக  ஏற்க மறுத்து வ்ருகின்றன்ர்.