கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து 4,000 இணையதளங்களை முடக்கிய சீனா

கடுமையான விமர்சனங்கள் எதிர்கொண்டதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் 4,000 இணையதளங்களை சீனா நீக்கியுள்ளது.

china

சமீப காலமாக சீனாவில் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் பரப்பட்டு வந்தன. விமர்சனங்கள் பரப்பப்படும் நபர்கள் குறித்தும், சமூக வலைதளங்களையும் சீன அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதையடுத்து அதிகளவில் தவறான தகவல்களை பகிரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது.

அதற்கு பதிலாக வேபீடோ, வீ சேட் உள்ளிட்ட வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவைகள் 24 மணி நேரமும் அரசு நியமிக்கப்பட்ட குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 4,000 இணையதளங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.

இது குறித்து சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “ கடந்த மூன்று மாதங்களில் தவறான கருத்துகளைப் பரப்பக்கூடிய சூதாட்டம், மதம், ஆபாசத் திரைப்படங்களை பகிரும் 4,000 இணையதளங்களை சீனா நீக்கியுள்ளது. கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இப்பணியில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.