நான்டாங்க், சீனா

சீனாவின் நான்டாங்க் நகரில் ஏற்பட்ட திடிர் பள்ளத்தில் ஒரு காரும், மரமும் விழுந்தது.

சீனாவில் முக்கிய நகரில் பிரதான சாலையில் ஒரு பள்ளம் திடீரென ஏற்பட்டது.

அப்போது அந்த சாலையில் சென்றுக்கொண்டிருந்த மினி வேன் ஒன்று அந்த பள்ளத்தில் விழுந்து, உள்ளே சென்றுவிட்டது.

அந்தப் பள்ளம் கிடுகிடுவென பெரிதாகத் தொடங்கியது.

சாலை ஓரத்தில் இருந்த மரமும் அந்த பள்ளத்தில் விழுந்து விட்டது.

அந்த பள்ளத்தின் அருகில் சென்று பார்க்கும் போது பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட நீர்க்குழாய் உடைந்து இருப்பது தெரிந்தது.

இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் உலா வருகிறது.

அந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளார்கள்.

சென்னை மெட்ரோவினால் அடிக்கடி ஏற்படும் பள்ளத்தை பார்த்த நமக்கு இது ஒரு அதிசய நிகழ்வாகத் தெரியாது