இடாநகர்:

திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் சில மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக கடுப்படைந்த சீனா, இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது.

திபெத்தை சேர்ந்த புத்தமத தலைவரான தலாய்லாமா இந்தியாவின் பாதுகாப்பில் வசித்து வருகிறார். இவர், அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்க மாவட்டத்தில் உள்ள போம்டிலா நகருக்கு வந்துள்ளார்.

இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனார், இந்தியாவோ உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிட வேண்டாம் என பதில் கூறியது. இதைத்தொடர்ந்து இந்திய தூதருக்கு சீனா சம்மன் அனுப்பி உள்ளது.

சீனாவுக்கான இந்திய தூதர் விஜய் கோகலேவுக்கு, சீன வெளியுறவு அமைச்சகம் அனுப்பியுள்ள சம்மனில்ர,  இந்தியாவின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சியூங்க் கூறுகையில்,சீனாவின் நலனுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என் கூறியுள்ளார்.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயும் மோதல் முற்றி வருகிறது.