பெய்ஜிங்: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பற்றி பேசி வரும் வேளையில் சீனாவோ 6ஜி தொழில்நுட்பத்தில் களம் இறங்கி இருக்கின்றனர்.

இதுதொடர்பான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்பான அறிவிப்பை அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, 6 ஜிக்கான பணிகள் தொடர்பாக வல்லுநர்களிடம் ஆலோனைகளையும், பரிந்துரைகளையும் கேட்டுள்ளது. 6ஜிக்கான அஸ்திவாரங்களும் போடப்பட்டுள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, 6 ஜி வேகம் வினாடிக்கு 1 டெராபைட்டை எட்டும்.

இது 5 ஜியை விட 8,000 மடங்கு வேகமாக இருக்கும். 6 ஜியைச் சுற்றியுள்ள ஆய்வுகளை மேற்பார்வையிட சீனா 2 செயல் குழுக்களை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது, அவற்றில் ஒன்று துறை அமைச்சகங்களின் நிர்வாகிகளால் ஆனது.

பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 37 நிபுணர்களைக் கொண்ட இரண்டாவது குழுவை ஆதரிப்பதற்கு இந்த குழு பொறுப்பாகும்.

6 ஜி நெட்வொர்க்குகள் 1TB / வினாடி அல்லது 1,000 ஜிகாபைட் அல்லது வினாடிக்கு 8,000 ஜிகாபிட் வேகத்தை வழங்கக்கூடும். இது போன்ற வேகங்கள் புதிய வகை பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தும்.

5 ஜி இன்னும் ஆரம்ப நிலையில்.உள்ளது. 6 ஜி மீதான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இது விரைவு போல தெரிந்தாலும், அதை உருவாக்க 10 ஆண்டுகள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.