பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹானில், வெறும் 12 நாட்களில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்களை கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது சீனா.
அங்கு கண்டறியப்பட்ட புதிய தொற்றுகள், நோயின் இரண்டாம் அலை குறித்த அச்சத்த‍ை அதிகரித்துள்ளது அந்நாட்டில்.
மொத்தமாக, 6.68 மில்லியன் மக்களுக்கு சோதனை செய்யப்பட்டதில், அறிகுறியல்லாத நோயாளிகள் 206 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு, நியுக்லிக் ஆசிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவிற்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழும் சீனா, தனது பொருளாதார முடக்கத்தை விடுவிக்கும் பொருட்டும், வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கும் வகையிலும், இந்த மிகப்பெரிய பரிசோதனை செயல்பாட்டை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த மாபெரும் பரிசோதனை குறித்த அறிவிப்பு மே மாதம் 12ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.