இந்தியப் பெருங்கடலில் கால்வாய் அமைக்கும் சீனா

கோலாலம்பூர்

லேசிய நாட்டின் அருகே இந்தியப் பெருங்கடலில் கால்வாய் ஒன்றை சீனா அமைக்க உள்ளது.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு மலேசிய அரசின் தலைநகரான கோலாலம்பூர் அருகே கிரா கால்வாய் என ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு ஆலோசித்தது. அதை ஒட்டி அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த கால்வாய் இந்தியப் பெருங்கடலில் அந்தமான் கடல் பகுதியில் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டது.  ஆனால் பொருள் செலவு, உள்ளூர் அரசியல் விவகாரங்கள் உள்ளீட்ட பல காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது இந்த கால்வாயை அமைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கால்வாய் அமைக்கப்பட்டால் இந்த கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களின் பயண தூரத்தில் பல கிமீ தூரம் வரை குறையும் என கூறப்படுகிறது. இந்த கால்வாய் முக்கியமாக தாய்லாந்து வளைகுடாவை சுற்றிச் செல்லும் கப்பல்களுக்கு இது மிகவும் குறுக்கு வழியாக அமையும்.

இந்த திட்டத்தை சீனா செயல்படுத்துவதன் மூலம் இந்த கடற்பகுதி முழுவதும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்புள்ளது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த கால்வாய் அமைப்பது பொதுவான சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு என கூறப்பட்டாலும் அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் அமைவதால் அதன் நட்பு நாடுகளை சேர்ந்த கப்பல்களை மட்டுமே சீனா அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கால்வாய் அமைப்பதினால் தாய்லாந்து நாட்டுக்கு கப்பல் போக்குவரத்து எளிதாக வாய்ப்பு  உள்ள்து. குறிப்பாக இந்தியாவில் இருந்து மற்றும் இந்தியா வழியாக தாய்லாந்து செல்லும் கப்பல்கள் பெருமளவில் பயனடையும் என கூறப்படுகிறது.