இந்தியா உள்பட 5 நாடுகளின் கால்நடை தீவனங்களுக்கு வரி ரத்து: சீனா அதிரடி

பீஜிங் :

ந்தியா, வங்கதேசம், லாவோஸ், தென்கொரியா மற்றும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன்ஸ் உள்பட  கால்நடை தீவனங்களுக்கான வரியை ரத்து செய்து, சீனா உத்தரவிட்டு உள்ளது.

இந்த புதிய உத்தரவு வரும்  ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா – சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தகம் சம்பந்தமான வரி விதிப்பு முரண்பாடுகளை தொடர்ந்து இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ப  கால்நடை தீவனங்களுக்கான  வரியை ரத்து செய்வதாக சீனா அறிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும்  பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்  பொருட்களுக்கு சீனாவும் மாறி மாறி கடுமையாக வரிகளை விதித்து வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கும் வகையில், ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தக  நல்லுறவை பேணி வருகிறது. ஏற்கனவே மோடியுடன் சீன அதிபர் பேச்சுவார்த்தையின்போதும் இது எதிரொலித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,  இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து சீனாவின்  நிதி அமைச்ச கம் உத்தரவி  பிறப்பித்து உள்ளது. இந்த புதிய உத்தரவு  ஜூலை 1-ந் தேதி முதல் அமல் வருவதாகவும் தெரி வித்து உள்ளது.