பீஜிங்

புத்த மத தலைவரான அடுத்த தலாய்லாமாவை சீனா தேர்வு செய்ய உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார்.

சீன நாட்டின் பகுதி என கூறப்படும் திபெத் பகுதியில் புத்தமத தலைவரான தலாய் லாமா வசித்து வந்தார்.  சீனாவில் ஏற்பட்ட உள்ளூர் கலகம் காரணமாக அவர் கடந்த 1959 முதல் இந்தியாவில் வசித்து வருகிறார்.   இமாசலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வரும் தலாய் லாமாவுக்கு தற்போது 84 வயதாகிறது.

இவருக்கு அடுத்த தலாய் லாமா நியமிப்பது குறித்து சில காலமாக கேள்விகள் எழுந்து வருகிறது.   அடுத்த தலாய் லாமா நியமிப்பது குறித்து பலவித ஊகங்கள் எழுந்து வருகின்றன.  இந்நிலையில் திபெத் பகுதியின் துணை அமைச்சர் அந்தஸ்தில் உள்ள சீன அதிகாரி வாங் நேங் ஷெங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாங், “புத்த மத தலைவர் தலாய் லாமா நியமனம் என்பது வரலாறு, அரசியல் மதம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.   இதற்கென பல நடைமுறைகள் உள்ளன.  எனவே  இந்த தலாய்லாமா நியமனத்தில் எந்த ஒரு வெளிநாடோ அல்லது மக்களோ தலையிட முடியாது” என கூறி உள்ளார்.

அவர் நேரடியாக கூறாவிடினும் இந்தியாவை குறித்து ஜாடையாக தெரிவிக்கிறார் என்பது பலரும் அறிந்ததாகும்.