பெய்ஜிங்: கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனை சீனா வாபஸ் பெற முடிவு செய்து இருக்கிறது.

சீனாவிலிருந்து, அமெரிக்கா உள்ளிட்ட 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். கொரோனா வைரஸின் பிறப்பிடமான உஹான் மற்றும் அதன் அருகில் உள்ள நகரங்கள் லாக்டவுன் செய்யப்பட்டன.

அதே போன்று சீனாவின் மற்றொரு நகரான ஹூபே மாகாணமும் கடந்த 2 மாதங்களாக லாக்டவுன் செய்யப்பட்டு உள்ளன. இந் நிலையில் மாகாணத்தின் சில குறிப்பிட்ட நகரங்களில் இந்த லாக் டவுனை திரும்ப பெற சீனா முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, எவ்வித உடல்பாதிப்பும் இல்லாதவர்கள் வெளியேற அனுமதிக்கப் படுவார்கள் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.  1.10 கோடி மக்கள் தொகை கொண்ட உஹான் நகரத்தில் உள்ள விமான நிலையம், ரயில், பேருந்து போக்குவரத்து ஆகியவை ரத்து செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.