பீஜிங்,

சைனாவில் இருந்து லண்டன் வரை  12,000 கிலோ மீட்டர் தூரம் செல்லும்  சரக்கு ரெயிலை இயக்கியுள்ளது சைனா.

சைனாவின் ஏற்றுமதி வருமானத்தை பெருக்கும் முயற்சியாகவும், ஐரோப்பாவுடன் இணைப்பை வலுப்படுத்தவும்  இந்த ரெயில் இயக்கப்படுவதாக சைனா அறிவித்து உள்ளது.

இந்த ரெயில் 18 நாட்களில் 12,000 கிலோ மீட்டர் கடக்கும். இதற்கான விழா அன்மையில் நடைபெற்றது.

இந்த சரக்கு ரெயில் சைனாவின் ஈவு என்ற இடத்தில் இருந்து புறப்பட்டது. இது  முக்கிய வர்த்தக நகரங்களான மத்திய ஜேஜியாங் மாகாணம் வழியாக  கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக லண்டன் நகரம் சென்றடையும்.

ஏற்கனவே மாட்ரிட் நகரில் இருந்து ஸ்பெயினுக்கு இதுபோன்ற சரக்கு ரெயில் விடப்பட்டுள்ளது.

இந்த சரக்கு ரெயில் சேவை காரணமாக  விமான மூலம் சரக்கு அனுப்பப்படும் செலவு பாதியாக குறைந்துள்ளதாகவும், கம்பல் மூலம் அனுப்பப்படும் சரக்கு சென்றடையும்  நேரத்தில் பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் சரக்கு ரெயில் சேவைகளை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த சைனா ஆலோசனை  செய்து வருகிறது.

சைனா,  தொழில் வளர்ச்சி மேம்படுத்த புதிய முறைகள் தேடி வருகிறது. வர்த்தகத்தை மேம்படுத்த முனைப்பு காட்டி வருகிறது

இதன் காரணமாக சைனாவின் வெளிநாட்டு முதலீடு  இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.