பெய்ஜிங்:

கடந்த 30 ஆண்டுகளாக குறைந்து வரும் வளர்ச்சியை உயர்த்திப் பிடிக்கும் நோக்கில், பில்லியன் டாலர் மதிப்புள்ள வரிகள்,கட்டணங்களை குறைத்தும், கட்டமைப்பு முதலீட்டை அதிகரித்தும், சிறு நிறுவனங்களை ஊக்குவிக்கவும் சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


சீன நாடாளுமன்றத்தில் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் அதிபர் லி கிக்யாங், நடப்பு 2019 நிதி ஆண்டில், 6.0 முதல் 6.5 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.6 சதவீதமாக இருந்துள்ளது.
அரசின் நிதிக் கொள்கை செயலுக்கு கொண்டு வரப்படும். இதனையொட்டி வரி குறைப்பு மற்றும் நிறுவனங்களுக்கான கட்டண குறைப்பு செய்யப்படும். சிறு தொழில்கள் முதலீடு அதிகரிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், சீனா இந்த ஆண்டு வளர்ச்சி இலக்கை 6.0 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கவுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் உலகளாவிய மற்றும் உள்ளூர் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.