பெய்ஜிங்:

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா வரி விதிப்பை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ரீதியிலான மோதல் தொடங்கியது. இதனால் சீனாவுக்கு 3750 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகத்தில் பற்றாகுறை ஏற்பட்டது.

இதையடுத்து வாஷிங்டன்னில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இரு நாட்டு அதிகாரிகளும் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில் வர்த்தக மோதலை இருநாடுகளும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்புகளையும் நிறுத்திவைக்க இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளது. வர்த்தக பற்றா குறையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. இதை சீனா ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்யும் திட்டத்தை படிப்படியாக சீனா அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.