அமெரிக்கா வளரும் நாடுகளின் மீது வர்த்தக தடையை செயல்படுத்தினால் சீனா தனது  உறவை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும் என அறிவித்துள்ளது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வர்த்தகம் மீதான விவாதம் இன்று  நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், சீனாவின் துணை பிரதமர் லியு ஹே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்க சீனா விரும்புவதாகவும், சில பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்ய முயற்சிப்பதாகவும் அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.