700 சதுர அடியில் 1,152 கிலோ நெல் மகசூல்…சீனா சாதனை
பீஜிங்:
700 சதுர அடி நிலத்தில் சீனா மேற்கொண்ட ஆராய்ச்சியில் 1,152 கிலோ நெல் மகசூல் கிடைத்துள்ளது.
சீனா விவசாய பல்கலைக்கழகம், அறிவியல் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் அதிக மகசூல் பெறுக்கூடிய ரக அரிசி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டில் யுன்னான் மாகாணத்தில் உள்ள கேஜியு பகுதியில் 3 நிலங்களை தேர்வு செய்து தொடர் ஆராய்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் நிலையான மற்றும் மிதமான மழை, பனிப்பொழிவு மற்றும் சரிசமமான சதுப்பு நிலப்பகுதியான இந்த பகுதி கடல்மட்டத்தில் இருந்து ஆயிரத்து 200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலத்தில் சோதனை முயற்சியாக 0.07 ஹெக்டேர், அதாவது 700 சதுர மீட்டர் அல்லது சுமார் 7,534 சதுரடி கொண்ட நிலத்தில் விதைத்த ஹைபிரீட் ரக நெற்பயிர் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது. மொத்த்ம் 1,152.3 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. அரிசி விளைச்சலில் இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது.