கொரோனா வைரஸ் : சீனாவின் ஏற்றுமதியில் 17.2% மற்றும் இறக்குமதியில் 4% சரிவு

பீஜிங்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரண்மாக சீனாவில் ஏற்றும்தி 17.2% மற்றும் இறக்குமதி 4% சரிந்துள்ளது.

வர்த்தக உலகில் சீனா முன்னணி நாடாக உள்ளது.  கடந்த சில மாதங்களாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஆன வர்த்தகப் போர் காரணமாக சீன ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு அடைந்தது.   இதனால் சீனா மற்ற நாடுகளுடன் ஆன வர்த்தக்த்தை அதிகப்படுத்தி வந்தது.  தற்போது அமெரிக்கா சீனா இடையில் ஆன வர்த்தகப் போர் முடியும் நிலைக்கு வந்துள்ளது/

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கி உள்ளது.  இது வரை சுமார் 3200 க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கிய கொரோனா வைரஸால் 90000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  பல உலக நாடுகளில் போக்குவரத்துத் தடை விதிக்கபட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தலைமையகம் என வர்ணிக்கப்படும் சீனாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் சரிந்து வருகிறது.   சென்ற மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 17.4 % குறைந்துள்ளது.  அதே வேளையில் இறக்குமதி 4% குறைந்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் ஏற்றுமதி இறக்குமதியில் 16.5% அதிகரித்துள்ள நிலையில் மொத்தத்தில் 15% குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா தனது வர்த்தகம் குறித்த விவரங்களை ஜனவரி மாதத்திலிருந்து வெளியிடவில்லை. ஆயினும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீன வர்த்தகம் 7090 கோடி டாலர் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதைப் போல் வர்த்தக வீழ்ச்சி காரணமாக 24960 கோடி டாலர் மதிப்பிலாஅ பொருட்கள் சீனாவில் தங்கி உள்ளதாக தெரிய வந்துள்ள்து.