பீஜிங் :
கொரோனா தடுப்பூசி மருந்தை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்க உள்ள ‘கோவக்ஸ்’ அமைப்பில் நம் அண்டை நாடான சீனா இணைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ‘கோவக்ஸ்’ அமைப்பு வாயிலாக ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை விநியோகம் செய்ய உள்ளது.இதில் அமெரிக்கா சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் தவிர 172 நாடுகள் இணைந்துள்ளன.உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால் கோவக்ஸ் அமைப்பில் இடம் பெறவில்லை.சீனாவும் வளரும் நாடுகளுக்கு தானேநேரடியாக கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவக்ஸ் அமைப்பில் சீனா இணைந்தது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சீனாதெரிவித்துள்ளது.இதன் மூலம் சீனாவில் தயாராகும் தடுப்பூசி மருந்துகள் கோவக்ஸ் அமைப்பு மூலம் வளரும் நாடுகளுக்குவழங்கப்படும்.சீனாவில் தற்போது 11 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இவை அனைத்தும் பல்வேறு பரிசோதனைக் கட்டங்களில் உள்ளன. அவற்றில் நான்கு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் 12 நாடுகளில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு இறுதிக் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளன.
ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தும் பணியை சீனா துவக்கி விட்டதாக அதிகாரபூர்வ தகவல்வெளியாகியுள்ளது.விலை எவ்வளவுஉலக சுகாதார நிறுவனம் கோவக்ஸ் மூலம் ஒரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி மருந்தை 225 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.