தூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி? யோசிக்கும் சீனா

சீனா:
ரு ஆண்டுக்கு ஏறக்குறைய 5 பில்லியனுக்கும் அதிகமான சட்டைகளை உருவாக்கும் சீன நாட்டில் பலரும் செகண்ட் ஹேண்ட் துணிகளையும் பழைய துணிகளையும் அணிகின்றனர் என்பது வியப்பாகவே உள்ளது.

இ காமர்ஸ் போன்ற இணையதள பரிமாற்றம் சீனாவை உலகின் மிகப்பெரிய ஃபேஷன் சந்தையாக மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஜப்பானிய சில்லரை நிறுவனமான யுனிக்லோவின் உலகளாவிய வருவாயில் அமெரிக்காவை முந்திக்கொண்டு ஐந்தில் ஒரு பங்கை சீனா கைப்பற்றியுள்ளது. மேலும் சீனா ஆடைகளை அதிகமாக உற்பத்தி செய்து, மலிவாக விற்பதன் விளைவாக சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் 26 மில்லியன் டன் துணிகள் தூக்கி எறியப்படுகின்றன. அவற்றில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான துணிகளை மட்டுமே மீண்டும் பயன்படுத்தி மறுசுழற்சி செய்கின்றனர் என்று சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள சிலர் தங்களுடைய பழைய துணிகளை நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர், அல்லது பழைய துணிகளை போடுவதற்காகவே வைத்துள்ள ஒரு தொட்டியில் போட்டு செல்கின்றனர். மேலும் சீனாவின் முக்கிய நகரங்களை சுற்றி ஆடை சேமிப்பதற்காக சேமிப்பு தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

Jason Fang Photographer: Qilai Shen/Bloomberg

இதைப்பற்றி சீன தலைநகர் பீஜிங்கில் வசிக்கும் ஜாவோ சியாவோ தெரிவித்துள்ளதாவது: பழைய துணிகள் என்று அதை குப்பைத் தொட்டியில் தூக்கி எறியாமல், இங்கு வைப்பதால் எனக்கு ஒரு மன திருப்தி ஏற்படுகிறது, தூக்கி எறிய படுகின்ற துணிகள் எரிக்கப்படுகின்றன அல்லது புதைக்கப்படுகின்றன, அவ்வாறு வீணாகாமல் தொட்டியில் போட்ட இந்த துணிகளை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள், அதனால் நானும் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க இ-காமர்ஸ் சந்தைகளில் செகண்ட் ஹேண்ட் துணிகள் விற்கப்படுகின்றன, 70 சதவீதத்திற்கும் மேலாக இந்த துணிகள் சந்தையில் விற்கப்படுகின்றன. இந்த 70 சதவீதத்தில் 15 சதவீதம் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு சென்று சேருகின்றது.

இதைப் பற்றி பேசிய 38 வயதாகும் சென் வென் தெரிவித்துள்ளதாவது:
இந்த துணிகளை நான் ஒரு நல்ல காரணத்திற்காக வாங்குகிறேன், நான் ஏன் செகண்ட் ஹாண்ட் துணிகளை வாங்குகிறேன் என்று என் குடும்பத்தினர், நண்பர்களுக்கு கூட புரியவில்லை, மக்கள் இதைப் பார்க்கும்போது வறுமை என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் சுற்றுச்சூழலை காப்பதற்காகவே என்னால் முடிந்ததை செய்கிறேன், ஒருவேளை இது கழிவுகளாக தூக்கி எறியப்பட்டால் இதை மறுசுழற்சி செய்ய ஆகும் செலவை விட, மக்கள் இதனை வாங்கிக் கொள்வது சரியானது என்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் துணிகளை மறுசுழற்சி செய்வது எந்தவிதமான லாபத்தையும் கொடுப்பதில்லை. ஆனால் தற்போது சீன துணிகளை மக்கள் சுகாதாரமற்றவை என்று கருதுகின்றனர், அதனை கொரோனவைரஸ் உறுதி செய்துள்ளது, ஆகையால் இனி சீனாவில் தூக்கியெறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகள் என்னவாகும் என்பது தெரியவில்லை.