சீனாவுக்கு மருந்து ஏற்றுமதியா?…அலறும் இந்திய நிறுவனங்கள்

பெய்ஜிங்:

இந்தியாவில் இருந்து 28 மருந்து வகைகளை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது. புற்றுநோய், தொற்று நோய் உள்ளிட்ட நோய்களுக்கான இந்த 28 மருந்து வகைகளுக்கும் இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நல்ல ஏற்றுமதி தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பல தரப்பிலும் கூறப்படுகிறது. ஆனால் இதை இந்திய மருந்து நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.

‘‘இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளுக்கும் சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். இந்த ஒப்புதலை பெற்றால் தான் ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஒப்புதல் பெறுவது என்பது நீண்ட நடைமுறையாகும். இதற்கு இரண்டரை முதல் 3 ஆண்டுகள் வரை கூட ஆகும்’’ என்று இந்திய மருந்து நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘‘இந்த நடைமுறையை விரைவுபடுத்த இந்தியா மற்றும் சீனா அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாக சான்றிதழை சீனா ஏற்றுக் கொண்டால் மட்டுமே உடனடி மருந்து ஏற்றுமதிக்கு வாய்பபு உள்ளது’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

இறக்குமதி ரத்து மூலம் இந்திய மருந்துகளின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று அரசு அதிகாரிகள் மட்டத்தில் தான் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால், உண்மையான சந்தை நிலவராக தலைகீழாக உள்ளது. அதனால் சீனாவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்திய மருந்து நிறுவனங்கள் மத்தியில் ஆர்வம் இல்லாத நிலையே காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.