இஸ்ரேலுக்கான சீன தூதர் மர்மமான முறையில் மரணம்

ஜெருசலேம் :

ஸ்ரேலுக்கான சீனத் தூதர் ஞாயிற்றுக்கிழமை காலை டெல் அவிவின் வடக்கே உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, அது குறித்து விசாரணை நடத்துவதாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர்.

58 வயதான டு வீ பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இஸ்ரேல் தூதராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் உக்ரைனுக்கு சீனாவின் தூதராக பணியாற்றினார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர், இருவரும் தற்போது இஸ்ரேலில் இல்லை.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இஸ்ரேல் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, இஸ்ரேலில் சீன முதலீடுகளை கண்டித்தும், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை சீனா மறைப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார், இதற்கு சீன தூதர் டு வீ கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவரது மரணம் நிகழ்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.