பீஜிங்

வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தரும் முதலீட்டு திட்டங்களை சீன வங்கிகள் நிறுத்தி உள்ளன.

சீன வங்கிகளில் முதலீட்டை அதிகரிக்க பல திட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றான  ஸ்மார்ட் டெபாசிட் எனப்படும் குறுகிய தொகைக்கான முதலீட்டு திட்டங்களை வங்கிகள் க்டந்த வருடம் அறிமுகம் செய்தன. இந்த முதலீடுகளுக்கு அதிக விகிதத்தில் வட்டி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் இதில் ஏராளமானோர் முதலீடு செய்தனர்.

வங்கிகளுக்கிடையே ஆன போட்டியில் இந்த திட்டத்தின் கீழ் வரும் முதலீடுகளுக்கு  வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இது வங்கிகளுக்கு கடும் இழப்பை அளிக்கலாம் என கணக்கிடப்பட்டது. இதனால் நேற்று முதல் இந்த திட்டங்களை நிறுத்தப் படுவதாக வங்கிகள் அறிவித்துள்ளன. இனி இந்த திட்டத்தின் கீழ் முதலீடுகள் பெறப் போவதில்லை என வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் செய்யபட்டுள்ள முதலீடுகளும் விரைவில் முடிக்கப்பட்டு நிலுவைத் தொகைகள் வழங்கப்பட உள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன. சீன அரசின் நிதிநிலை கட்டுப்பாட்டுதுறை அதிகாரிகளின் பரிந்துரைப்படி இந்த திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.