பீஜிங்: சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் 1731 கிராம் சாம்பிள்களை அங்கிருந்து பூமிக்கு எடுத்து வந்திருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா தரப்பில், நிலவுக்கு, Chang’e-5 என்ற பெயர்கொண்ட விண்கலம் ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மூலம், சீனாவின் கொடியும் நிலவில் ஊன்றப்பட்டது.

சீனா தரப்பில், பூமிக்கு வெளியில், வேற்று கிரகத்திலிருந்து சாம்பிள்கள் சேகரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அந்த சாம்பிள்கள், அந்நாட்டின் ஆய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனா அனுப்பிய விண்கலம், கடந்த வியாழக்கிழமை அதிகாலையில், மங்கோலிய தன்னாட்சிப் பகுதியின் உள்புறத்தில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.