கொரோனா பரவல் – உள்நாட்டிற்குள்ளேயே சுற்றுலா சென்று மகிழும் சீனர்கள்!

ஷாங்காய்: கொரோனா பாதிப்பு காரணமாக, தங்களின் தேசிய தின விடுமுறையை, உள்நாட்டு அளவிலேயே சுற்றுலா சென்று கழிக்கின்றனர் சீனர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, இந்த தேசிய தின விடுமுறையின்போது, பல சீனர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக செலவழிப்பது வழக்கம்.

இந்தாண்டு மட்டும், தேசிய தின விடுமுறையின்போது, சுமார் 600 மில்லியன் சீனர்கள்(சீனாவின் மக்கள்தொகையில் பாதியளவு) சீனாவிற்குள்ளேயே இருக்கும் இடங்களுக்கு சுற்றுலாவை மேற்கொண்டுள்ளனர் என்று அந்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய டிராவல் ஏஜென்ஸி தெரிவிக்கிறது.

அதேசமயம், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டின் சுற்றுலா சுழற்சி 25% குறைவு என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு 782 மில்லியன் சீனர்கள் உள்நாட்டு சுற்றுலாவை மேற்கொண்டு, அதன்மூலம் 650 பில்லியன் யுவான் அளவிற்கு வருவாய் சுழற்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.