பாகிஸ்தான் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் சீன போர் விமானங்கள்

இஸ்லமாபாத்:

பாகிஸ்தானின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க சீன போர் விமானங்கள் வந்துள்ளன.


மார்ச் 23-ம் தேதி தேசிய தினத்தை கொண்டாடுகிறது பாகிஸ்தான். இதில் பங்கேற்பதற்காக ஜே-10 ரக போர் விமானங்களை பாகிஸ்தானில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது சீனா.

சீன பைலட்களுக்கு பாகிஸ்தான் அமோக வரவேற்பு அளித்தது. சிறுமி ஒருவர் மலர் செண்டு கொடுத்து அனைவரையும் வரவேற்றார்.

தேசிய தினக் கொண்டாட்ட அணிவகுப்பில் சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் பங்கேற்பதாகவும், சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது கலந்து கொள்வார் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆஷிப் காஃப்கார் தெரிவித்துள்ளார்.