பெய்ஜிங்: சீன மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக், தங்களது கொரோனா தடுப்பூசி 99 சதவீதம் வேலை செய்யும் என்று உறுதி கூறியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். சீனா, அமெரிக்கா, இஸ்ரேல் என பல  நாடுகளும் முயற்சியில் இருக்கின்றன.
இந் நிலையில் சீன மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக், ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையின் 2ம் கட்டத்தை எட்டி உள்ளது.
1000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 3ம் நிலை சோதனைகள் இங்கிலாந்தில் நடத்த அந்நிறுவனம் ஆரம்ப பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து சினோவாக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறி இருப்பதாவது: இந்த முயற்சி 99 சதவீதம் வெற்றிகரமானதாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி தொடர்பாக நாங்கள் பல ஐரோப்பிய நாடுகளுடன் பேசுகிறோம், இங்கிலாந்துடன் கலந்துரையாடினோம்.
நிலை 2 சோதனைகள், 3ம் நிலை தொடங்குவதற்கு பல மாதங்கள் உள்ளன. சொல்வது மிகவும் கடினம். அதுவும் இப்போது இருக்கும் நிலையில் சொல்வது மிகவும் கடினம். சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், அதற்கு வெளியேயும் ஒரு தீர்வை எவ்வாறு வழங்குவது என்பதையும் முக்கியமாக பார்க்கிறோம் என்று கூறி உள்ளனர்.