டில்லி

சீன ஹெலிகாப்டர்கள் லடாக் அருகே பறந்ததாகவும் அதை இந்திய விமானங்கள் விரட்டியதாகவும் எழுந்த தகவலால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் 3488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்துள்ளன.   இந்த இடங்களில் உள்ள பல பகுதிகள்  இன்னும் வரையறுக்கப்படாமல் உள்ளதால் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன.   சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் 2017 ஆம் ஆண்டு சீனப்ப்டைகள் குவிக்கப்படன.  அதையொட்டி இந்தியாவும் பாதுகாப்புப் படைகளை அனுப்பியது.  தூதரக நடவடிக்கைகள் மூலம் பிரச்சினை தீர்வுக்கு வந்தது.

கடந்த 5ஆம் தேதி அன்று வடக்கு பாங்காக் பகுதியில் இந்திய – சீன வீரர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது.  இதில் தலா 250 வீரர்கள் மோதினர்.   பலருக்குக் காயம் ஏற்பட்டது.  அதன் பிறகு இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர்.  அதன் பிறகு மீண்டும் சனிக்கிழமை நகுலா கணவாய் பகுதியில் கல்வீச்சு தாக்குதல்கள் நடந்தன.   அதுவும் சமரசம் செய்யப்பட்டது.

 காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிந்துள்ள லடாக் பகுதியில் சீனா ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.   எல்லையில் இதனால் பட்டம் ஏற்பட்டது.  இந்தியாவின் சுகோய் 30 ரக போர் விமானங்கள் சீன ஹெலிகாப்டர்களை விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த தகவலை யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.