புதுடெல்லி: லடாக் பகுதியில், சீனப் படையினர் இந்திய சாலைகளைப் பயன்படுத்தி, நமது பகுதிக்குள் நுழைகிறார்கள் என்று லடாக் பகுதியில் வசிக்கும் ஒரு ஆதிவாசி கிராமத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்த கிராமம், லடாக் பகுதியின் கடைக்கோடி டெம்காக் பிராந்தியத்தில் உள்ளது. அக்கிராமத்தின் பெயர் கோயுல்.

அப்படி, இந்தியப் பகுதிக்குள் நுழையும் சீனர்கள், இந்தியாவின் லடாக் வாசிகள் அப்பகுதிகளை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளையிடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் 10ம் தேதி, இந்தியப் பகுதிக்குள் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக ஊடுவினார்கள் சீனர்கள். அப்போது, அதைக் கண்ட கிராமத்தினர், இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதே கிராமத்தினர், அந்த இடத்தில் 5 நாட்கள் வரை காவல் இருந்தனர்.

பின்னர், டிசம்பர் 16ம் தேதி, 2 சீன வாகனங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். ஆனால், அப்போது இந்திய அதிகாரிகள் பலர் அங்கே இருந்தனர். எனவே, ஊடுருவல்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், நாட்டை ஆளும் மோடி அரசு, சீன விஷயத்தில் பேசுவதற்கே பயந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.