காற்று வாங்க விமானத்தின் அவசர வழி கதவை திறந்துவிட்ட சீன பயணி கைது

ஹாங்காங்:

சீனாவின் தென் மாகாணமான சிச்சுவான் மியான்யங் விமானநிலையத்தில் சீன பயணி ஒருவர் சீனாவின் விமானத்தில் ஏறி பயணத்திற்கு உட்கார்ந்திருந்தார். அப்போது விமானத்தின் உள்ளே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.

இதனால் காற்று உள்ளே வருவதற்காக அங்கிருந்த அவசர வழி கதவை திறந்துவிட்டார். இதனால் அவசர வழி கதவின் அமைப்பு உடைக்கப்பட்டு கதவு திறந்து கொண்டது. இதை கண்டு விமான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த சீன வாலிபரை கைது செய்தனர். அவரது பெயர் சென். 25 வயதாகும் அவர் காற்றுக்காக அவரது அருகில் இருந்த கதவின் கைப்பிடியை இழுத்துள்ளார்.

கதவு வெளிப்புறமாக விழுந்தவுடன் தான் அதிர்ச்சி அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். போலீசார் அவரை 15 நாடகள் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவருக்கு 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானநிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.