திபெத்தில் சீன ராணுவம் ஆயுத அணிவகுப்பு

லாசா:

திபெத்தில் உள்ள சீன ராணுவம் சார்பில் ஆயுதப் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

திபெத்தில் சீன ராணுவம் முகாம் உள்ளது. இங்கு ராணுவத்தினர் சார்பில் அணிவகுப்பு நடந்தது. இதில் தளவாட பொருட்கள், ஆயுத திறன், ராணுவம்-பொதுமக்கள் நல்லுறவு ஆகியவை இடம்பெற்றது.

இந்த அணிவகுப்பு உள்ளூர் ராணுவ முகாம் மற்றும் அரசு சார்பில் நடந்தது என்று பகுப்பாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில், ராணுவம்&மக்கள் நல்லுறவு தான் முக்கியமான விஷயம். இதன் மூலம் எதிர்காலத்தில் இங்கு வலுவான ராணுவத்தை கட்டமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டோக்லாம் விவகாரத்திற்கு பின்னர் முதன்முதலாக மக்கள் விடுதலைப் படை சார்பில் சில தினங்களுக்கு முன் இந்த அணிவகுப்பு நடந்ததாக சீன அரசின் செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆகஸ்டில் 4,600 மீட்டர் தொலைவுக்கு இப்படையின் 13 மணி நேர அணிவகுப்பு நடந்தது.

இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ள ஆயுதப்படை பிரிவு வாகனங்களுக்கு உள்ள;ர் பெட்ரோலிய நிறுவனம் ஒன்று எரிபொருள் விநியோகம் செய்துள்ளது. உள்ளூர் அரசு சார்பில் வீரர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..