புதுடெல்லி: குஜராத்திலுள்ள வல்லபாய் படேல் சிலை, சீனாவைச் சேர்ந்த எஸ்சிஓ அமைப்பால் உலகின் 8வது அதிசயமாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

குஜராத்தில் நர்மதா நதிக்கரையில், 182 மீட்டர் உயரத்தில்(597 அடி), உலகிலேயே மிக உயரமான சிலையாக அமைக்கப்பட்டது இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சிலையான வல்லபாய் படேல் சிலை.

மத்திய நரேந்திர மோடி அரசால் ஆயிரக்கணக்கான கோடிகளில் அமைக்கப்பட்ட இந்த சில தேவையற்ற ஒரு பகட்டு என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், மத்திய அரசு இதை ‘ஒற்றுமையின் சிலை’ என்று அழைத்தது.

தற்போது, இந்த உயரமான சிலை, சீனாவின் பீஜிங்கை தலைமையகமாகக் கொண்ட எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பால் உலகின் 8வது அதிசயமாக சேர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்த சிலை இருக்கும் சர்தார் சரேவார் அணைப்பகுதி தற்போது முக்கிய சுற்றுலாத் தளமாக வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.