பாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு சீனஅதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து

டில்லி:

தேர்தலில் முன்னிலை வகித்து வரும் பிரதமர் மோடிக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறத. இதில் நாடு முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில்  பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சியே அமையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதன் காரணமாக மோடிக்கு பாஜக தலைவர்கள் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீனா அதிபர்   ஜி ஜின்பிங்கும்  பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சீனாவின் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான  ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராக உள்ளார். ஜி ஜின்பிங்  பதவி ஏற்கும்போது,  இந்திய பிரதமர் மோடி,  சீன கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள். இந்திய – சீன உறவுகள் மேலும் முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று டிவிட் போட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜின்பிங், தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ள நிலையில், வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

You may have missed