டிரம்ப் வர்த்தகப் போர் : சொத்து மதிப்பு குறைந்த சீனப்பெண்

பீஜிங்

மெரிக்க அதிபர் நடத்தி வரும் வரத்தக்ப் போரினால் சீனாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்ணின் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக வரி விதித்தார். முதலில் இந்திய மதிப்பில் சுமார் 2,40,000 கோடி ரூபாய் மதிப்பில் வரிகளை உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தியது. இது அமெரிக்க அதிபருக்கு எரிச்சல் மூட்டியது.

அதை ஒட்டி மீண்டும் சீனப் பொருட்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிரம்ப் வரியை உயர்த்தினார். இதனால் சீனப்பொருட்கள் விலை அமெரிக்காவில் கடுமையாக உயந்தது. அதனால் அமெரிக்கர்கள் சீனத் தயாரிப்புக்களை இறக்குமதி செய்வதை பெருமளவில் நிறுத்தி விட்டனர்.

பங்குச் சந்தையில் சீன நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் சரிந்தது. அவ்வாறு சரிவு ஏற்பட்ட நிறுவனங்களில் டச் ஸ்கிரீன் மற்றும் லென்ஸ் டெக்னாலஜி நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தலைவி குவான்ஷின் சீனாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்களில் ஒருவராக இருந்தார்.

அவருக்கு ரூ. 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருந்தன. இந்த பங்குகள் விலை வீழ்ச்சியால் அவருக்கு கடுமையாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் அவருடைய சொத்து மதிப்பு ரூ. 50 ஆயிரம் கோடி அளவில் குறைந்து தற்போது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு வந்துள்ளது.