சீனர்கள் பாம்பை உண்பதை நிறுத்த வேண்டும் : நெட்டிசன் அறிவுரை 

சென்னை

கொரோனா வைரஸ் பாம்புகளை உண்பதால் உருவானதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான் ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்டோர்  மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  அத்துடன்  உலகின் பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருவதாக அச்சம் எழுந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவில் உள்ள ஊகான் நகரில் இந்த வைரஸ் தொற்று தொடங்கி தற்போது நாடெங்கும் பரவி உள்ளது.  சீனாவில் பல நகரங்களில் இந்த வைரஸ் தொற்று காரணமாக பலர் வீட்டுக் காவலில வைக்கப்பட்டுள்ளனர்.   ஊகான் நகரம் மற்ற இடங்களில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் குறித்து நெட்டிச்ன் பார்த்திபன் சண்முகம் தனது முகநூல் பதிவில்,

“பாம்புகளை உண்பதை நிறுத்துங்கள்.

சீனாவில் உள்ள கட்டு விரியன் மற்றும் நாகப் பாம்புகள் மூலம் இந்த உயிர்க் கொல்லி வைரஸான கரோனா வைரஸ் உருவானதாக பீஜிங் பல்கலைக்கழகத்தின் வெல் ஜி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.  இந்த வைரஸ் பரவி வருவதால் சீனாவில் பலர் மூச்சுத் தொற்று ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் உள்ளனர்.  அத்துடன் இந்த வைரஸ் உலகெங்கும் பரவி வருகிறது.  எனவே சீனர்கள் பாம்புகளை உண்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்”

எனப் பதிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி