பெய்ஜிங்:

சீனா 2011-ம் ஆண்டு ஏவிய ‘டியான்காங் -1’ என்ற விண்வெளி நிலையம் 2016-ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி செயலற்று போனதாக அறிவிக்கப்பட்டது. விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றி திரிந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கியது.

இதன் சில பாகங்கள் இன்று பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். அதிவேகமாக பூமியை நோக்கி பாய்ந்து வந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டன.

விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் கடல் பகுதியில் விழுந்ததாக சீனாவின் விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 10.15 மணியளவில் ஒரு பேருந்து அளவிலான பாகம் பூமியில் விழுந்திருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.