டோக்லாமில் சீன துருப்புகள் ஊடுறுவல்…..ராகுல்காந்தி குற்றச்சாட்டு

லண்டன்:

டோக்லாம் பகுதியில் சீன துருப்புகள் ஊடுறுவி முகாம் அமைத்துள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘சீன துருப்புகள் இன்னமும் டோக்லாம் பகுதியில் முகாமிட்டு உள்கட்டமைப்பை உருவாக்கி உள்ளன. பிரதமர் மோடி சீனாவிற்கு சென்ற போது இது குறித்து விவாதம் மேற்கொள்ளவில்லை.

கருத்தியல் போருக்கு நான் சண்டையிட்டு வருகிறேன். இந்த மாற்றம் 2014-க்கு பின்னர் என்னிடம் வந்துள்ளது. இந்திய அரசிற்கு ஆபத்து இருக்கிறது என்று உணர்ந்தேன். முத்தலாக் சட்ட மசோதாவில் குற்றம் சார்ந்த அம்சம் இடம்பெற்றுள்ளது’’ என்றார்.