நடிகர் ராதாரவி மீது பாடகி சின்மயி புதிய குற்றச்சாட்டு

மீ டூ விவகாரத்தில் பரபரப்பு கிளப்பும் பாடகி சின்மயி, தான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடிகர் ராதாரவிதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகி, சின்மயி திரைப்படங்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்து வருகிறார்.  சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற 96 படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணி கொடுத்தது இவர்தான்.

இதற்கிடையே மீ டூ விவகராத்தில் பல பிரபலங்கள் மீது சின்மயி குற்றம்சாட்டினார்.  அவர்களில் ராதாரவியும் ஒருவர்.

இந்த நிலையில் சின்மயியை நடிகர் ராதாரவி, கடுமையாக விமர்சித்தார். டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் சின்மயி தொடரமுடியாது என்றும் அவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் பேச முடியாமல் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சின்மயி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “என்னை டப்பிங்  ஆர்டிஸ்ட் யூனியனில் இருந்து நீக்கியுள்ளனர். இரண்டு வருடங்களாக சந்தா செலுத்தவில்லை என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால் இது குறித்து எனக்கு ஏதும் தகவல் தெரிவிக்காமல் நீக்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான 96 படம்தான் நான் டப்பிங் பேசிய கடைசி படமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “ஏற்கெனவே என்னை டப்பிங் பேச விடாமல் செய்துவிடுவதாக ராதாரவி மிரட்டினார். அதைப்போலவே செய்திருக்கிறார்” என்றும் சின்மயி தெரிவித்துள்ளார்.

 

 

கார்ட்டூன் கேலரி