சென்னை

ண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான் தமிழ்ப் பாடல்கள் இசைத்ததால், இந்தி மொழி தெரிந்த பலர் அரங்கை விட்டு வெளியேறியதைக் கண்டித்து பாடகி சின்மயி டிவிட்டரில் பதிந்துள்ளார்

லண்டனில் இசை அமப்பாளர் ஏ ஆர் ரகுமான் நேற்று, இன்று, நாளை என்னும் தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்.  அதில் இந்திப் பாடல்களுடன் தமிழ் பாடல்களும் பாடப்பட்டது.  தமிழ்ப் பாடல்கள் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திக்காரர்கள் அரங்கை விட்டு வெளியேறினார்கள்.  தங்களுக்கு ரகுமான் அநீதி இழைத்து விட்டதாக டிவிட்டரில் புலம்பவும் செய்தார்கள்.

இதற்கு தமிழ்நாட்டவர்கள் மட்டும் இன்றி, அனைத்து தென் இந்தியர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  அதில் பாடகி சின்மயியும் ஒருவர்.  தனது ட்விட்டரில் நான்கு பதிவுகள் பதிந்துள்ளார்.  அதில் சில இந்தி வார்த்தைகளும் கலந்து பதிந்தது தான் அந்தப் பதிவின் ஹைலைட்டே.

முதல் ட்வீட்டின் தமிழாக்கம்.

When Rahman sir wins 2 Oscars and creates history, he is “An Indian”, but 7-8 Tamil gaane kya gaa liye aap naraaz hote ho. What yaar?

ரகுமான் சார் இரண்டு ஆஸ்கார் அவார்ட் வாங்கி சரித்திரப் புகழ் பெற்ற ஒரு இந்தியர்.  ஆனால் ஒரு ஏழெட்டு தமிழ் பாடல்களுக்காக நீங்கள் எரிச்சல் அடைகிறீர்கள்,  என்னப்பா இதெல்லாம்?

இரண்டாம் டிவீட்டின் தமிழாக்கம்
The show was called ‘Netru Indru Naalai’, had 65% Hindi songs (Set List is out there). Music knows no boundaries / language.

அந்த நிகழ்ச்சியின் பெயர் “நேற்று இன்று நாளை”.  ஆனால் அதில் 65%  இந்திப் பாடல்கள் பாடப்பட்டன.  இசைக்கு மொழியோ எல்லையோ கிடையாது.

மூன்றாவது டிவீட்டின் தமிழாக்கம்

Chase the American dream, your kids can Spanish; Live in the UK that once colonised India – but cry foul when a when you hear Tamil songs

நீங்கள் அமெரிக்காவில் வசிக்க கனவு காணலாம்.  உங்கள் குழந்தைகள் ஸ்பானிஷ் மொழி பேசலாம், நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டனில் நீங்கள் வசிக்கலாம்,  ஆனால் தமிழ் பாடலைக் கேட்டால் மட்டும் அழுகை பொத்துக் கொண்டு வருகிறதே.

நான்காம் டிவீட்டின் தமிழாக்கம்

முடிவாக என எழுதி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  அந்த புகைப்படத்தில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் :

தமிழ் மக்கள் ஏன் இந்தி கற்றுக் கொள்வதில்லை என பலர் கேட்கிறார்கள்.  கற்போம்.  அது தேவை எனில் அவசியம் கற்போம்.  இந்தி பிரசார சபை இங்கு தலைமுறைகளாக உள்ளது.  ஆனால் மைல் கற்களில் இந்தி எழுதுவது ஏன்? அங்குள்ள உள்ளூர்வாசிகளுக்கு ஆங்கிலம், இந்தி இரண்டும் தெரியாத நிலையில் இப்படி எழுதி நீங்கள் என்ன பெறப் போகிறீர்கள்? விந்திய மலைகளுக்கு தெற்கே உள்ள மொழிகளை அதற்கு வடக்கே உள்ளவர்கள் இங்கு பிழைக்க வந்து கூட கற்க முயல்வதில்லை.   அது அரசு ஊழியராக இருந்தாலும் சரி, சாதாரண பானி பூரி விற்பவனாக இருந்தாலும் சரி, இங்குள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எதில் என்ன கேட்டாலும், இந்தியில் தான் பதில் வரும்.  அவரவர்க்கு தேவைப்படும் மொழிகளை தன்னைப் போல் கற்றுக் கொள்வார்கள்.  தேவையின்றி யார் மீதும் எந்த மொழியையும் திணிக்காதீர்கள்” என அந்த புகைப்படத்தில் எழுதப் பட்டுள்ளது.