கொரோனா ஊரடங்கால் அணைத்து தரப்பினரும் எந்தப் பணிகளையும் செய்ய முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். அப்படி வேலையில்லாமல் பாதிப்படைந்த பல குடும்பங்களுக்கு திரைத்துறையினர் உதவி செய்து வருகின்றனர்.
அதன்படி பின்னணி பாடகி சின்மயி பாடல்களை பாடி நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.இதனால், 1,100-க்கும் மேலான குடும்பங்கள் இதுவரை பயன்பெற்றுள்ளன. இதற்காக, கடந்த ஒரு மாதத்தில் 1,700-க்கும் அதிகமான பாடல்களை வீட்டில் இருந்தபடியே பாடி வீடியோ பதிவாக உருவாக்கியுள்ளார்.
மக்களுக்கு நேரடியாக கிட்டத்தட்ட ரூ।30 லட்சம்வரை நிதி உதவி சென்றுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படும் குடும்பங்களைக் கண்டுபிடித்து என் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர்களது விவரங்களைப் பதிவிடுகிறேன்.
இந்தப் பணி மிகவும் திருப்தியாக இருக்கிறது என கூறியுள்ளார்