சின்மயி சரவெடி: பிரபல கிரிக்கெட் வீர்ர் மீது பாலியல் புகார்

திரைத்துறை பிரபலங்களுக்கு எதிராக பாலியல் புகார்களை வெளியிட்டு வந்த பாடதி சின்மயி தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் மலிங்கா பாலியல் புகார் கொடுத்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்களை, ட்விட்டர் தளத்தில் பலரும் வெளியிடப்பட்டு வருகின்றனர்.  இந்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது. திரைப்பட பாடகி சின்மயியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார். திரைத்துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அள்ளிவீசிய ஸ்ரீரெட்டியை தொடர்ந்து தற்போது சின்மயியும் பல்வேறு புகார்களை அளித்துவருகிறார்.

பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பாடகர் கார்த்திக், டி.என். சேஷகோபாலன், ரவிகிரண், சசிகிரண், பிராமணர் சங்க தலைவர் நாராயணன்.. பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த வரிசையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா மீதும் சின்மயி பாலியல் புகார் பதிவிட்டுள்ளார்.

மலிங்காவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்ததாக ஒரு புகாரை தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி பதிவு செய்துள்ளார்.

அதில்  அந்த பெண் கூறியதாவது: கடந்த சில வருடங்களுக்கு  முன் நான் மும்பையில் இருந்தேன். அப்போது எனது தோழியை காண ஓட்டலில் உள்ள அறைக்கு சென்றேன். அப்போது அந்த அறையில் என் தோழி இல்லை. ஆனால் அங்கு இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா இருந்தார். அவர் சற்றும் எதிர்பாராத நிலையில் என்னை படுக்கையில் தள்ளி என் முகத்தருகே நெருங்கி வந்தார். அவர் என்னைவிட உயரமாகவும் பலசாலியாகவும் இருந்ததால் அவரிடமிருந்து என்னால் மீள முடியவில்லை. அப்போது கண்களையும் வாயையும் இறுக்கமாக மூடிக் கொண்டேன்.  அந்த நேரத்தில் ஹோட்டல் ஊழியர் கதவை தட்டியதால் மலிங்கா அறையை திறக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது பாத்ரூமுக்கு சென்று என் முகத்தை கழுவிக் கொண்டு ஹோட்டல் ஊழியர் சென்றவுடன் நானும் சென்று விட்டேன்.

நான் வேண்டுமென்றே அவரது அறைக்குள் நுழைந்ததாக சிலர் என்னை அவமானப்படுத்தினர்.  அவர் பிரபலம் என்பதால் அவரை தேடி நான் போனதாகவும் எனக்கு அவருடன் செக்ஸ் வைத்து கொள்ள ஆசை இருந்ததாகவும் சிலர் பழிபோட்டனர்” என்று அந்த பெண் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.