ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்! சின்மயி

சென்னை:

திரையுலகில் டப்பிங் ஆர்ட்டிஸ் யுனியன் தேர்தல் விவகாரம் தொடர்பாக பாடகி சின்மயிக்கும், தலைவர் ராதாரவிக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டால், டப்பிங் யூனியனில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள சின்மயி,  ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, மன்னிப்பு ராதாரவி வீட்ல போய் கேட்கணுமா இல்ல கால்ல விழுந்து கேட்கணுமா? என்று கேள்வி எழுப்பியவர், ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என கூறியுள்ளார்.