பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சிற்கு சின்மயி காட்டம்…!

‘கருத்துக்களை பதிவுசெய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே . பாக்யராஜ் பேசும்போது : ஒரு பெண்ணுக்குத் தந்தை பாதுகாப்பிற்காகத்தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு செல்போன் வந்ததும் போய்விட்டது.

பாலியல் பிரச்சினைக்குப் பெண்கள் தான் மூலகாரணம். ஆண்கள் சின்ன வீடு வைத்திருந்தாலும், மனைவியைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால், வேறொரு ஆணுடன் இருக்கும் பெண்கள் குழந்தையையும், கணவரையும் கொலை செய்யும் அளவுக்குத் துணிகிறார்கள். பெண்களுக்கு எப்போதும் சுய கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்வார்கள்.

இந்த செல்போன் வந்ததால் தான் பெண்கள் கட்டுப்பாட்டைத் தாண்டி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அவன் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததும் தவறு தான்” என்று பேசினார் இயக்குநர் பாக்யராஜ்.

இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாக்யராஜின் இந்தக் கருத்துக்கு சின்மயி தனது ட்விட்டர் பதிவில், “பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்கள் மீது பழிபோடாதீர்கள் என அதிகாரத்தில் இருக்கும் ஆண்களிடம் சொல்லிச் சொல்லியே சோர்வாகிறது. ஊசி நூல் / முள் சேலை எல்லாம் நிறைய முறை சொல்லி அடித்துத் துவைத்தாகிவிட்டது.

இப்படி நீடித்திருக்கும் சிந்தனையால் பல பெண்கள் இறந்து போகின்றனர். துறையில் இருக்கும் மூத்தவர்கள் பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்களைப் பழி சொன்னபோது” என்று தெரிவித்து பாக்யராஜ் பேசிய வீடியோ பதிவைப் பகிர்ந்துள்ளார்.

You may have missed