சிக்கியது சின்னத்தம்பி: முகாம் கொண்டுசெல்ல வனத்துறையினர் தீவிரம்

உடுமலை:

டந்த 1 மாதமாக போக்குகாட்டி வந்த காட்டுயானை சின்னதம்பி இன்று கரும்புகாட்டில் இருந்து வெளியே வந்தபோது  மீண்டும் மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

நேற்று 2 முறை மயக்க ஊசி செலுத்தியும் பிடிபடாமல் அருகே உள்ளே கரும்புக் காட்டுக்குள் சென்று மறைந்துகொண்ட சின்னத்தம்பி இன்று காட்டை விட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

உடுமலை அருகே கடந்த 3 வாரங்களாக சுற்றித்திரிந்த சின்னதம்பி என்ற காட்டு யானையை, வனத்துறையினர் பிடித்து, டாப்சிலிப் மலைப்பகுதியில் கொண்டு விட்டு வந்த நிலையில், ஒரே நாளில், சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் நடந்து மீண்டும் உடுமலை அருகே முகாமிட்டது.

தொடர்ந்து அதை விரட்ட வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், கும்கியானை மூலமும் அதை விரட்ட முடியவில்லை. அதையடுத்து சின்னத்தம்பியை கும்கியாக மாற்றப்போறோம் என்று வனத்துறை அமைச்சர் குரல் கொடுக்க, கொதித்தெழுந்த வன உயிரின ஆர்வலர்கள், சேவ் சின்னத்தம்பி என்று குரல் கொடுத்தும், வழக்கும் தொடர்ந்தனர்.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், சின்னத்தம்பியை காயம் படாமல் பிடி;தது, முகாமில் அடைக்க வேண்டும் உத்தர விட்டது. அதையடுடுத்து,சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

நேற்று இரண்டு மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டும் அசராத சின்னத்தம்பி இன்று கரும்புக்காட்டில் இருந்து வெளியே வந்ததும் அதை பிடிக்க  வனத்துறை மருத்துவர் அசோகன், வன ஆலோசகர் தங்கராஜ் பன்னீர்செல்வம், மாவட்ட வன அலுவலர் திலீப் ஆகிய மூன்று பேரும் மயக்க ஊசி செலுத்துவதற்கான துப்பாக்கியுடன் மூன்று திசைகளில் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில்  கரும்புக்காட்டில் இருந்து வெளியே வந்த சின்னதம்பியை நோக்கி 3 ஊசிகள் செலுத்தப்பட்ட நிலையில், ஒரு மயக்க ஊசி மட்டுமே யானையின் காலில் சொருகியது. ஆனால், அதற்கும் அசராமல் மீண்டும் காட்டுக்குள் போன சின்னத்தம்பி, மீண்டும் வெளியே வந்தது. அப்போது 4வது ஒரு மயக்க ஊசி யானையின் வயிற்றுப்பகுதியில் செலுத்தப்பட்டது.

இதன் காரணமாக அரை மயக்கத்துக்கு சென்ற சின்னத்தம்பியை, கும்கிகள் உதவியுடன் அருகிலுள்ள  வாழை தோப்பிற்கு கொண்டு வந்தனர்.

அதையடத்து,  சின்னத்தம்பி கழுத்தில் கட்டபட்டிருந்த ரேடியோ காலரை அகற்றிய வனத்துறை யினர், அதை லாரியில் ஏற்றிக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.