சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்!

சென்ன‍ை: சினிமா பிரபலம் சின்னி ஜெயந்த் மகன்  ஸ்ருதன் ஜெய், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1980கள் முதல் காம‍ெடியன், குணச்சித்திர நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பல பரிமாணங்களில் பயணித்தவர் சின்னி ஜெயந்த்.

இவர், தற்போது விவசாயமும் செய்து வருகிறார். இவரின் மனைவி சொந்தமாக பள்ளி நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள். ஆனால், இவர்கள் யாரும் சினிமா பக்கம் வரவில்லை.

இந்நிலையில், அவரின் மகன் ஸ்ருதன் ஜெய், சிவில் சர்வீஸ் வெற்றிக்கு முயன்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் முடிவுகளில், இந்திய அளவில் 75வது இடம் பெற்றுள்ளார். மொத்தமாக 829 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி