குஷ்புவை ஃபாலோ செய்யும் சிராக் பஸ்வான்: கட், டேக், ரிபீட் என அரசியலிலும் சினிமாத்தனத்தை காட்டும் போலி அரசியல்வாதிகள்.. வீடியோ.

மிழகத்தில் குஷ்பு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட குஷ்பு, தொடர்ச்சியாக பேச முடியாமல், வாய் குழம்பி, ரிபீட் என கூறி, மீண்டும் பேசியது செய்தியளார்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசியல் பேட்டியையும், சினிமா ஷூட்டிங் என நினைத்து  குஷ்பு  ரிபீட், கட்  என கூறியது, Repeat…. ஏம்மா…ஃப்ளோவுல போகும்போது…. கடுப்பான குஷ்பூவின் நடவடிக்கைகள்  செய்தியாளர்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியது மட்டுமின்றி பாஜகவினரின் கேலிப்பொருளாகவும்  மாறினார். அவரது பேட்டி தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் குஷ்புவின் ரிபிட் குறித்து கலாய்த்து வருகின்றனர்.

அதுபோல, பீகார் தேர்தலில் போட்டியிடும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வானும்,  தனது தந்தையின் அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு முன்பு, சினிமா நடிகர் போல, அழகாக மேக்கப்பட்டு போட்டுக்கொண்டு, தனது தந்தையின் மறைவு குறித்து கிஞ்சித்தும் வருத்தம் இல்லாமல், தனது அழகின்மீது அக்கறைக்கொண்டு, தன்னை அவ்வப்போது டச் செய்துகொண்டு, தான் ஒரு சினிமா நடிகர் என்பதையும், நடைபெறும் நிகழ்வு சினிமா ஷூட்டிங் என்பதுபோல அவர் நடந்துகொள்ளும் நடவடிக்கைகள், அவரது போலித்தனத்தை  நிரூபித்துள்ளது. இதுதொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தந்தையின் படத்தின் அருகே நிற்கும் சிராக் பஸ்வான், பின்னால் மறைவாக இருந்து ஒருவர்  கூறுவதை, திரும்பி கூறுவது, அவ்வப்போது இடை நிறுத்தி பேசுவது, பின்னர் ரிபிட், கட் என கூறுவதும், அதை பின்னர் சரி செய்துகொள்ளலாம் என்பதாக அவர் கூறுவது, அவரது போலித்தனத்தை தோலூரித்து காட்டியுள்ளது.

தமிழக பாஜகவுக்கு புதிய வரவான நடிகை குஷ்புவை  கூறியதைப்போல, பீகார் அரசியலை கலக்கப்போவதாக கூறும் நடிகரும், அரசியல்வாதியுமான சிராஸ்பஸ்வான் கட், டேக், ரிபீட் என,  அரசியலிலும் சினிமாத்தனத்தை காட்டும் அவரது போலி முகத்திரையை கிழிக்கும்  வீடியோ வைரலாகி வருகிறது.

இதுபோன்ற  போலி அரசியல்வாதிகள் மக்களை எவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்பதை அறிய, இந்த வீடியோவை கடைசி வரை பாருங்கள்!

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்தியஅமைச்சராக பதவி வகித்தவர் ராம்விலாஸ் பஸ்வான். அவர் கடந்த 8ந்தேதி (அக்டோபர்) மறைந்த நிலையில், அவரதுகட்சியான லோக் ஜனசக்தி கட்சிக்கு பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையேற்றார்.

சிராக் பஸ்வான் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். 2014ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் சிராக் ஜமுய் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றா. தற்போது பீகார் அமைச்சரவையில், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது பகிர்மான துறை அமைச்சராக உள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள  பீகார், சட்டமன்ற தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவரும்,  மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கூட்டணியில் அதிக தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கூறியதால் அதிருப்தி நிலவியது.  இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததால்,  லோக்ஜனசக்தி கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது.

மோடி ஆதரவு – நிதிஷ்குமார் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி தாங்கள் தேசிய அளவில் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளனர்.  மாநிலத்தில், பாஜகவை எதிர்த்து போட்டியிட்டாலும் அது நட்பு ரீதியான போட்டி என்றும் தேர்தலுக்குப் பிறகு பாஜக – லோக் ஜன் சக்தி கூட்டணி அமையும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்  சிராக் பஸ்வான். இவர்தான் ஏற்கனவே என் நெஞ்சை பிளந்தால் மோடி இருப்பார் என மோடியின் தீவிர தொண்டரான மாறி கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.