சிரஞ்சீவி படத்துக்கு ரூ. 20 கோடி செலவில் அமைக்க்கப்பட்ட மலையாள கிராமம்…

 

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சிவி நடிக்கும் புதிய படமான “ஆச்சார்யா” பெரும் பொருட் செலவில் தயாராகிறது.

கொரட்டல சிவா டைரக்ட் செய்யும் இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், இந்த படத்தை தயாரிப்பதுடன் கவுரவ வேடத்திலும் சில காட்சிகளில் தோன்றுகிறார்.

கொரோனா காரணமாக எட்டு மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் ஷுட்டிங் சில தினங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த படத்துக்காக கேரள கிராமத்தை அச்சு அசலாக அப்படியே, ஐதராபாத்தில் உருவாக்கியுள்ளனர்.

பிரமாண்ட கோயில், வீடுகள்,என நிஜ கிராமத்தை கண் முன் கொண்டு வரும் இந்த அரங்கத்தை அமைக்க 20 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

திருமணம் முடிந்து தேனிலவு கொண்டாடிவிட்டு, மும்பை திரும்பியுள்ள காஜல், அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பில் சிரஞ்சீவியுடன் கலந்து கொள்கிறார்.

மணிசர்மா இசை அமைக்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸ் ஆகிறது.

ஆச்சார்யாவை முடித்து விட்டு மலையாள ரீ-மேக்கான லூசிபரில் நடிக்க உள்ளார், சிரஞ்சீவி.

– பா. பாரதி