புதிய படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடி கிடையாது..

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி இப்போது ’’ஆச்சார்யா’’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆச்சார்யா, ஐதராபாத் பிலிம் சிட்டியில் மீண்டும் தொடங்கியுள்ளது.


இந்த படத்தை முடித்து விட்டு, மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘’லூசிபர்’’ படத்தின் தெலுங்கு ‘’ரீ-மேக்’கில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
லூசிபர் படம் மூலம் , நடிகர் பிரிதிவிராஜ், இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
அரசியலை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அவரது வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
சிரஞ்சீவி மகன் ராம் சரண் இந்த படத்தை தயாரிக்கிறார்.
லூசிபரில் மோகன்லாலுக்கு, ஜோடி கிடையாது.
ஆனால் தெலுங்கு ’லூசிபர்’’ படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சிரஞ்சீவிக்கு ஜோடி உண்டு என்றும் செய்திகள் பரவின.
ஆனால் இந்த படத்தில் ஜோடி இல்லாமலேயே. சிரஞ்சீவி நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை நம் ஊர் இயக்குநர் மோகன்ராஜா, டைரக்ட் செய்கிறார்.

-பா.பாரதி.