சோனு சூட்டுடன் சண்டை போட தயக்கம் காட்டிய சிரஞ்சீவி..

சோனு சூட்டுடன் சண்டை போட தயக்கம் காட்டிய சிரஞ்சீவி..

வில்லன் வேடங்களில் நடித்தாலும் நிஜத்தில் கதாநாயகனாக இருப்பவர் இந்தி நடிகர் சோனு சூட்.

கொரோனா காலத்தில் பணமாகவும், பொருளாகவும் கோடிக்கணக்கில் அள்ளி கொடுத்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்.

கொரட்டல் சிவா இயக்க, சிரஞ்சீவி-காஜல் அகர்வால் நடிக்கும் ’’ஆச்சார்யா’’ படத்தில் சோனு சூட் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக எட்டு மாதங்கள் முடங்கி கிடந்த இதன் படப்பிடிப்பு அண்மையில் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

சிரஞ்சீவியுடன், சோனு சூட் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

இந்த காட்சியில் சோனு சூட்டை அடித்து உதைக்க சிரஞ்சீவி பெரிதும் தயக்கம் காட்டியுள்ளார்.

இது குறித்து சோனு சூட் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:

‘’ இப்போது எனக்கு ஹூரோ வேடங்கள் தான் அதிகமாக வருகின்றன. வில்லன் கேரக்டரில் நடிக்க யாரும் அழைப்பதில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஆச்சார்யா ஷுட்டிங்கில் கலந்து கொண்டேன்.
சிரஞ்சீவி, என்னை எட்டி உதைப்பது போன்ற காட்சி உள்ளது. ஆனால் அவ்வாறு நடிக்க அவர் தயங்கினார். ‘’ நாம் இருவருமே மக்களுக்கு சேவை செய்துள்ளோம். உங்களை உதைக்கும் காட்சியில் நடித்தால் என் மீது மக்கள் கோபம் கொள்வார்கள்’’ என சிரஞ்சீவி ரொம்பவும் யோசித்தார்.

இந்த தயக்கத்தால், காலால் என்னை அவர் எட்டி உதைக்கும் காட்சியை பலமுறை படமாக்க நேரிட்டது’’ என அந்த பேட்டியில் மனம் திறந்துள்ளார், சோனு சூட்.

-பா.பாரதி.