ரஜினிகாந்த் பட கேரக்டரில் சிரஞ்சீவி…

 

சிரஞ்சீவி நடித்து வரும் ‘ஆச்சார்யா’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கால் முடங்கி கிடந்த ஆச்சார்யா, மீண்டும் சுறுசுறுப்பாய் தொடங்கி முடிந்து விட்டது.

கொரட்டலா சிவா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு காஜல் நடிக்கும் முதல் படம் இது.

மே மாதம் 19 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் சரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நக்சலைட் வேடத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த ராணுவ வீரன் படத்தில், சிரஞ்சீவி நக்சலைட்டாக நடித்திருப்பார்.

இந்த படத்தின் போட்டோ ஒன்று அண்மையில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கையில் சிவப்பு துணியை கட்டி இருக்கும் சிரஞ்சீவி, ராம்சரண் தோளில், கையை வைத்திருப்பது போல், அந்த போட்டோ உள்ளது.

ராம்சரண் போலீஸ் அதிகாரியா? அல்லது சிரஞ்சீவியின் தோழனா ? என்பது தெரியவில்லை.

– பா. பாரதி