‘ரீ-மேக்’ படங்களில் நடிக்க  ஆர்வம் காட்டும் சிரஞ்சீவி..

சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் குதித்த சிரஞ்சீவிக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் அரிதாரம் பூச ஆரம்பித்தார்.

சின்ன இடைவெளிக்கு பிறகு அவர் முதன் முதலாய், ‘கைதி எண்- 150’ என்ற படத்தில் நடித்தார்.
இதன் தொடர்ச்சியாக ‘சைரா நரசிம்ம ரெட்டி’’ படத்தில் நடித்திருந்தார்.

இப்போது சிரஞ்சீவி ‘’ஆச்சார்யா’’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டல சிவா இந்த படத்தை இயக்குகிறார்.

இதனைதொடர்ந்து சிரஞ்சீவி வரிசையாக மூன்று ரீ-மேக் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

முதல் படம்- மலையாளத்தில் ‘ஹிட்’ அடித்த ’லூசிபர்’.

பிரிதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த இந்தப்படம் மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்றது.

அரசியல் கதைக்களம் கொண்ட லூசிபரில், மோகன்லால் கேரக்டரில் நடிக்கிறார், சிரஞ்சீவி.

அடுத்து ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் மேஹார் ரமேஷ், டைரக்டு செய்கிறார்.

இந்த இரு ரீ-மேக் படங்களில் நடித்து விட்டு, சிரஞ்சீவி மூன்றாவதாகவும் ரீ-மேக் படத்தில்தான் நடிக்க உள்ளார். இது, எந்த மொழி படத்தின் ரீ-மேக் என்று அறிவிக்கப்படவில்லை.

-பா.பாரதி.