“ஆச்சார்யா” படத்தில் ‘நக்சலைட்’ வேடத்தில் சிரஞ்சீவி ?

 

சிரஞ்சீவி- காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்கு படத்தை கொரட்டல சிவா இயக்கி வருகிறார்.

எட்டு மாதங்களுக்கு பிறகு இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக அங்குள்ள புறநகர் பகுதியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நேற்று நேரில் பார்வையிட்டு, கலை இயக்குநர் மற்றும் படத்தின் இயக்குநர் சிவா ஆகியோரை பாராட்டினார்.

இந்த படத்தை நிரஞ்சன் ரெட்டியுடன் இணைந்து ராம்சரண் தயாரித்து வருகிறார்.

ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அதில் ஒரு வேடம் ‘நக்சலைட்’ என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கும் அறங்காவலர்களை எதிர்த்து போராடும் நக்சலைட்டாக, சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

– பா. பாரதி